Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

நாரம்மலை நகர மண்டபத்தில் பிறைநிலா ஊடகத்தின் மாபெரும் ஊடக செயலமர்வு

 



குருநாகல், நாரம்மல நகர மண்டபத்தில் நேற்றைய தினம் (2025.09.20) மாபெரும் ஊடக செயலமர்வொன்று இடம்பெற்றது.


பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் சப்ராஸ் அபூபக்கர் இந்த ஊடகச் செயலமர்வை நெறிப்படுத்தி இருந்தார்.


இந்த ஊடகச் செயலமர்வில் குருநாகல் மாவட்டத்தின் இளம் ஊடகவியலாளர்கள் பலர் கலந்து பயன்பெற்றிருந்தனர். 



ஊடகத்துறை அறிமுகம், அறிவிப்புத்துறை, புகைப்படக்கலை, பாடசாலைகளில் ஊடகப் பிரிவின் அவசியம் போன்றவை செயன்முறைப் பயிற்சிகளாக மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப் பட்டிருந்தது.


சுமார் 100 மாணவர்கள் வரை கலந்து கொண்ட இந்த ஊடகத்துறை சார் பயிற்சிப் பட்டறை நேற்று சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை இடம்பெற்றிருந்தது.



செயலமர்வில் முடிவில் மாணவர்கள் பூரணத் திருப்தியடைந்ததோடு கலந்து கொண்டு திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களில் சிலர் பிறைநிலா ஊடக வலையமைப்பின் பாடசாலைகளுக்கான பிராந்திய செய்தியாளர்களாக தெரிவு செய்யப் பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.


இது போன்று உங்கள் பிராந்தியங்கள், உங்கள் கல்வி நிலையங்களிலும் ஊடகச் செயலமர்வுகளை நடாத்த விரும்பின் பிறைநிலா ஊடக வலையமைப்பை தொடர்பு கொள்ளுங்கள்.








No comments