Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

ஹபுகஸ்தலாவ, அல் மின்ஹாஜில் ஊடகத்துறைசார் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை


நுவர எலியா மாவட்டம், ஹபுகஸ்தலாவ அல்-மின்ஹாஜ் தேசிய பாடசாலையில் ஊடகச் செயலமர்வொன்று இடம்பெற்றது.


நேற்று (2025.09.13) பாடசாலையின் அதிபர் ஜனாப் பஸரி சேர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் சப்ராஸ் அபூபக்கர் வளவாளராக கலந்து கொண்டிருந்தார்.



அல்-மின்ஹாஜ் தேசிய பாடசாலையில் தரம் 10 மற்றும் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்காகவே இந்த ஊடகத்துறை சார் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.


ஊடகத்துறை அறிமுகம், செய்தித்துறை, அறிவிப்புத்துறை, புகைப்படத்துறை என்பவற்றின் செயன்முறை ரீதியான பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 


பாடசாலையின் வரலாற்றில் நடைபெறுகின்ற முதலாவது ஊடகச் செயலமர்வு இது என்பதால் மாணவர்கள் மிகவும் உற்சாகத்தோடு இந்தப் பயிலரங்கில் கலந்து பயன் பெற்றிருந்தனர். 



செயலமர்வின் இறுதியில் பாடசாலையின் ஊடக பிரிவிற்கான உறுப்பினர்கள் தெரிவும் இடம் பெற்றது. 


இதேவேளை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 03.00 மணி வரை நடைபெற்ற இச்செயலமர்விற்கு பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் முழுமையான அனுசரனை வழங்கியிருந்ததோடு , பாடசாலையின் ஆசிரியர் குழாமும், நேரசூசிப்படி நிகழ்வில் கலந்து ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர்,


இது போன்று உங்களுடைய கல்வி நிலையங்களிலும் ஊடகத்துறை சார் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்ய விரும்பினேன் பிறைநிலா ஊடக வலையமைப்பினை தொடர்பு கொள்ளலாம் .






No comments