Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

40,000 மெட்ரிக் தொன் கீரி சம்பாவை இறக்குமதி செய்ய அனுமதி

 


சந்தையில் நிலவும் கீரி சம்பா பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையிட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், கீரி சம்பா பற்றாக்குறை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு கூறினார்:

"விவசாயிகள் அறுவடைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைந்துள்ளனர். இருப்பினும், கீரி சம்பாவின் பயிரிடுதல் 7% மட்டுமே உள்ளது, இதனால் அதன் உற்பத்தி அளவு குறைந்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை."


"பாரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் கீரி சம்பாவை கையிருப்பில் வைத்திருக்கிறார்களா என்பது குறித்து தற்போது தெளிவான தகவல்கள் இல்லை. மேலும், 40,000 மெட்ரிக் தொன் கீரி சம்பாவை இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், அந்தத் தொகையை இறக்குமதி செய்யலாம். இருப்பினும், இதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை." (AdaDerana)




No comments