Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

அரசாங்க உத்தியோகத்தர்களின் டிஜிட்டல் கையொப்பம் (Digital Signature) அறிமுகம்

 


அரசாங்க சேவையை நவீன மயப்படுத்தி, புதிய பாதைக்கு இட்டுச் செல்லும் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேத்ன தெரிவித்தார்.


பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின், உள்நாட்டலுவல்கள் பிரிவில் அரசாங்க அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பத்தை (Digital Signature) அறிமுகப்படுத்தும் நிகழ்வில் அண்மையில் (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.



மக்களைப் பாதுகாக்கின்ற வினைத்திறன் கொண்ட அரசாங்க சேவையை ஏற்படுத்துவது தமது நோக்கம் என்றும் கிராம உத்தியோகத்தர்கள் வரை இந்த புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


அரசாங்க அலுவல்களை இலகுவாக மற்றும் வினைத்திறனாக மேற்கொள்வதற்காக 2006ஆம் ஆண்டு 19ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் பிரகாரம் உள்நாட்டு அலுவல்கள் பிரிவின் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களல் பணியாற்றும் அதிகாரிகளின் கையொப்பங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாடு இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.



இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக லங்கா பே நிறுவனம் டிஜிட்டல் கையொப்பத்தை உறுதிப்படுத்தும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. 


இதன்படி கடிதங்கள் ஊடான செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்கு முடிந்தவரை மிகவும் வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் சேவையை வழங்க முடியும்.  (News.lk)


 


 இந்நிகழ்வில் பொது நிருவாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார, கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கிளியே உட்பட உள்நாட்டு அலுவலகங்கள் பிரிவின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


No comments