Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

பரகஹகொடுவ ஹிஜ்ரா பாலர் பாடசாலையில் கண்காட்சி நிகழ்வு

 


-ஸைத் அஸ்ஸால்-



நாரம்மல, பரகஹகொடுவ YMMA அமைப்பின் கீழ் இயங்கும் ஹிஜ்ரா பாலர் பாடசாலையின் கண்காட்சி நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக குளியாபிடிய பிரதேச சபையின் தலைவர் திரு. விஜேசிரி ஏக்கநாயக்க வும், கௌரவ அதிதியாக சியம்பளாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையின் அதிபர் ஜனாப் ஹைதர் அலியும், விஷேட அதிதியாக YMMA அமைப்பின் மாவட்ட பணிப்பாளர் ஜனாப் பதியுஸ் ஸமானும் கலந்து கொண்டிருந்தனர்.



2025, ஒக்டோபர் 10, 11 ம் திகதிகளில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பாலர் பாடசாலை மாணவர்களது ஆக்கங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.


இதேவேளை இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இக்கண்காட்சியில் பிரதேசத்தில் உள்ளவர்கள் கலந்து பயன்பெற்றிருந்ததோடு, மாணவர்கள் திறமைகளைக் கண்டு வியந்திருந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் ஸைத் அஸ்ஸால் தெரிவித்திருந்தார்.






No comments