மடிகே மிதியால மத்திய கல்லூரியின் புதிய அதிபராக கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார் ஜனாப் மிஷார். இந்நிகழ்வு நேற்றைய தினம் (2025.10.14) செவ்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றிருந்தது.
சம்சுதீன் முகமத் மிஷார், தனது ஆரம்பம், உயர் கல்வியை குளி/ எஹட்டமுள்ள முஸ்லீம் மஹா வித்தியாலயத்தில் கற்றார். பின் தனது ஆசிரியர் பயிற்சியை உருகுணை தேசிய கல்வியற் கல்லூரியில் நிறைவு செய்தார். பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் இணைப்பாடவிதான செயற்பாட்டுக்காக தேசிய இளைஞர் விருதின் தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
பின்னர் தனது ஆசிரியர் முதல் நியமனத்தை 2009.06.22 பெற்று கெகுணகொல்ல தேசிய பாடசாலையில் கடமைப் பொறுப்பேற்றார். அங்கு 2016.08.01 ஆம் திகதி வரை சேவை செய்த மிஷார் 2016.08.02 ஆம் திகதி பறகஹதெனிய தேசிய பாடசாலையில் ஆசிரியராக இணைந்து கொண்டார். 2025.10.13 வரை பறகஹதெனிய தேசிய பாடசாலையில் கடமையாற்றிய இவர் 2023 - 2025 வரை பறகஹதெனிய தேசிய பாடசாலையின் பிரதி அதிபராகவும் கடமை புரிந்திருந்தார்.
இந்நிலையில் 2025.10.14 ஆம் திகதி அதிபர் சேவை - தரம் 111 பதவி நிலையோடு மடிகே மிதியால மத்திய கல்லூரியின் அதிபராக ஜனாப் மிஷார் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்விமான்கள் செறிந்து வாழும் அழகிய கிராமம் மெடிகே மிதியால. இந்தப் பிரதேச பாடசாலைக்கு புதிய அதிபரின் வருகை அவசியமாக இருந்ததாகவும், இதுவரை காலமும் சேவை செய்த அதிபரை நன்றியோடு நினைவு கூறுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.
No comments