திருமண வாழ்வை எதிர் நோக்கியிருக்கும் 16 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான 2 கற்கைநெறி வாரம் சியம்பலாகஸ்கொடுவயில் ஆரம்பிக்கப்பட்டது . சியம்பலாகஸ்கொடுவ அந்நூர் அரபுக் கலாசாலையில் கேற்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேசத்தின் யுவதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
The LifeBond எனும் நிறுவனத்துடன் சியம்பலாகஸ்கொடுவ ஜலாலிய்யா ஜும்மாஹ் பள்ளி நிர்வாகம் இணைந்து இந்தக் கற்கை நெறியை ஆரம்பம் செய்திருந்தது.
ஜலாலுல்லாஹ் ஜும்மாஹ் பள்ளிவாசலின் தலைவர், ஓய்வுபெற்ற அதிபர் M. L. M. ரவூப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் The LifeBond நிறுவனத்தின் நிருவாகிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.அக்ரம் அப்துல் சமத், அஷ்ஷெக்ஹ் மொஹம்மத் பக்கியுடீன் ஆகியோர்களும் சிறப்பதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை இப்பாடத்திட்டத்தில் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 யுவதிகள் இணைந்து கொண்டிருந்தனர். சுமார் 15 தலைப்புக்களில் நடைபெறும் இப்பாடத்திட்டத்தின் இறுதியில் பெறுமதியான சான்றிதழ்களும் வழங்கி மாணர்கள் கெளரவிக்கப் படவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments