-சப்ராஸ் அபூபக்கர்-
குருநாகல் மாவட்டம், மெத்தேகெட்டிய அந்நூர் அஹதியா பாடசாலையின் முப்பெரு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
நூரானியா அஹதியா பாடசாலையின் நிர்வாகக்குழுத் தலைவர் அஷ்ஷெக்ஹ் மிஸ்வார் (உஸ்மானி) தலைமையில், மெத்தேகெட்டிய முஸ்லீம் வித்யாலய மைதான திறந்த வெளியரங்கில் இவ்விழா இடம்பெற்றிருந்தது.
நிகழ்வின் பிரதம அதிதியாக பேருவளை, ஜாமியா நளீமியா கலாபீடத்தின் இஸ்லாமிய கற்கைநெறிகளுக்கான பீடாதிபதி அஷ்ஷெக்ஹ் S. H. M. பளீல் (நளீமி) கலந்து கொண்டிருந்தார். குருநாகல் மாவட்ட அஹதியா சம்மேளனத்தின் செயலாளர் அல்ஹாஜ் A . R . M . நிஸாம், குளியாபிட்டிய கிழக்கு பிரதேச சபையின் கலாசார நிகழ்வுகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் அஷ்ஷெய்க்ஹ் M . M . ஐயூப் ஆகியோர்கள் சிறப்பதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர். இவர்களோடு ஊரிலுள்ள ஆலிம்கள், கல்விமான்கள், பெற்றோர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் நிகழ்வில் கலந்திருந்தனர் .
நூரானியா அஹதியா 2022 ஆம் ஆண்டு மீள் ஆரம்பம் செய்யப்பட்டிருந்தது. எனவே அதனுடைய மூன்றாண்டு விழா, நடைபெற்று முடிந்த தேசிய அஹதியா பரீட்சைகளில் சேத்தி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா, மீலாத் தினத்தை சிறப்பிக்க நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்குகின்ற விழா எனும் 3 விழாக்களை ஒன்றிணைத்து இம்முப்பெறும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேடையில் மீலாத் தின போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற மாணவர்களது கலை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதோடு , கலந்து கொண்ட அதிதிகளுக்கான நினைவுச்சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
பொதுஹர பிரதேசத்தில் நீண்ட நாட்களுக்குப்பிறகு நடைபெற்ற இம்முப்பெறு விழா பார்ப்பதற்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், தொடர்ந்து இந்த சேவையை பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து ஊர் மக்கள் முன்னெடுக்குமாறும் உரைகளை நிகழ்த்திய அதிதிகள் தமது உரையில் வேண்டிக்கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.
இதேவேளை இந்நிகழ்வுகளை பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் சப்ராஸ் அபூபக்கர் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments