-ஜெகதீஷ்வரன்-
"உலகை வழி நடாத்த அன்பால் போசியுங்கள்" எனும் மகுடவாசகத்தோடு தெல்தெனிய, இரங்கலை மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வொன்று இடம்பெற்றது.
சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்க நேற்று வியாழக்கிழமை இந்நிகழ்வு பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாடசாலையின் அதிபர் திரு தியாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் மாணவர்களுக்கான மேடை நிகழ்ச்சிகள், போட்டி நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதோடு, ஆசிரியரின் நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
No comments