Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

சியம்பளாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையில் தனித்துவமான நிகழ்வாக English Festival



-ஸைத் அஸ்ஸல்-

கிரிஉல்ல கல்வி வலையம் , சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையில் English Festival நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


பாடசாலையின் அதிபர் ஜனாப் ஹைதர் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிரிஉல்ல கல்வி வலையத்தின் ஆங்கிலப்பாட பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி A. A. S. D. பிரியதர்ஷினி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.


நேற்று செவ்வாய்க்கிழமை, பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களது மேடை நிகழ்ச்சிகள் பலவும் அரங்கேற்றம் செய்யப்பட்டிருந்தன. 



தமிழ் மொழிப்பிரிவு, மற்றும் ஆங்கில மொழிப்பிரிவு மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 


இதேவேளை நிகழ்வில் அயற்பாடசாலை அதிபர்கள், பாடசாலையின் அபிவிருத்திச்சங்க செயலாளர், பழைய மாணவர் சங்க செயலாளர் உற்பட பலர் கலந்து சிறப்பித்திருந்தனர். 










No comments