-M. F. ஹம்தி-
மஹவ கல்வி வலையத்திற்கு உற்பட்ட அல் மதீனா ம . வித்தியாலயத்தில் வாசிப்பு மாதத்தை சிறப்பிக்க விசேட கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வை பாடசாலையின் அதிபர் ஜனாப் நஜ்முதீன் அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து ஆரம்பித்து வைத்தார்கள்.
இக்கண்காட்சியில் மாணவர்களது ஆக்கங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவர்களது திறமை, வாசிப்பு போன்றவற்றை பிரதிபலிக்கும் முகமாகவே இந்த கண்காட்சி பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHBw1rAu1fUxl71qKgItZgCPkatLtK8pQm3clNhIpOWP109jG6zMGWa8UH0PkVCn5fzWqPKnFLeNOQYNxw1IYy9nV6sRhL2vpENDpQcI5chzVe8GMJzYAUFNeHvnwQJsPYyiskbSo79nQUZ7_XtfsxAteJLqtk17e6FhBhXS1BJruauuE0motGageSAR4/s16000/WhatsApp%20Image%202025-10-28%20at%2021.11.02_a1bf06a4.jpg)






No comments