Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

புதிய காத்தான்குடி பதுறியா 167A ரிஸ்வி நகர் பகுதி மக்கள் பொலிசாருக்கு நன்றி தெரிவிப்பு..!

 


B.M. பயாஸ் (ஊடகவியலாளர்)


திறமையான அதிகாரிகள் கிடைத்திருப்பது காத்தான்குடிக்கு வரம்.


வெள்ள அனர்த்த நேரத்தில் பொதுமக்களின் வீடுகளில் வெள்ள நீர் தேங்கி நின்ற போது புதிய காத்தான்குடி பதுறியா 167A ரிஸ்வி நகர் பகுதிக்கு பொறுப்பான அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிடவில்லை மற்றும் நிவாரணம் பெற்றுத்தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அப்பகுதி மக்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று 15.12.2025ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.



இதனை அடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி  A.M.R.N.அழககோன்(IP) அவர்கள் உடனடியாக செயற்பட்டு சுற்றுச்சூழல் மற்றும் சிவில் பொறுப்பதிகாரி, பொலிஸ் உப பரிசோதகர் ஜெயசேகர அவர்களிடம் அப்பகுதிக்கு சென்று அம்மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கலந்தாலோசித்து விடயத்திற்கு பொறுப்பான உரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு  அம்மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.


பொலிஸ் உபதேசக்குழு செயலாளரும் ஊடகவியலாளருமான B.M.பயாஸ் சகிதம் சுற்றுச்சூழல் மற்றும் சிவில் பொறுப்பதிகாரி, பொலிஸ் உப பரிசோதகர் ஜெயசேகர அவர்களும்

அப்பகுதிக்கு சென்றிருந்தனர். 



200 இற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்து தங்களது ஆதங்கங்களை தெரிவித்தனர். மும்முரமாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுடன் தொடர்புகொண்டனர்.


பிரதேச செயலக உத்தியோகத்தர் ரசூல்ஷா மற்றும் ஊடகவியலாளர் நூர்தீன் அவர்களும் வருகை தந்து அம்மக்களிடம் விடயங்களை தெளிவு படுத்தினர். 


சம்பவதினமான 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை

விடுமுறை தினமாக இருந்தாலும் மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா அவர்கள் 

அப்பகுதி முக்கியஸ்தர்கள் சிலரை பிரதேச செயலகத்திற்கு அழைத்து விடயங்களை தெளிவுபடுத்தினார். அவர்களும் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். கோரிக்கைகளை பிரதேச செயலாளரிடம் தெரியப்படுத்தி தீர்வினைப்பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்ததை  தொடர்ந்து அவர்கள் மேற்கொள்ள இருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.  பிறகு நேற்றைய தினம் திங்கட்கிழமை அப்பகுதிக்கு சென்ற காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹரா மெளஜூத் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா

ஆகியோர் முழுமையாக அப்பகுதியை பார்வையிட்டு ஆறுதல் ஊட்டும் வார்த்தைகளையும் கூறி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.



இதனையடுத்து அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகா ரி மற்றும் சிவில் பொறுப்பதிகாரி அப்பகுதிக்கு விரைந்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.


No comments