முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரண் அடைந்துள்ளார்.
சதொச ஊழல் மோசடி விவகாரத்தில் தேடப்பட்ட நிலையில் ஜோன்ஸ்டன் தலைமறைவாகி இருந்தார்.
பல குழுக்கள் அடங்கிய பொலிஸார் தீவிரமாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவராக முன்வந்து சரண் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.
அதற்கமையவே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றைய தினம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். (Lankasri)





No comments