கெகுணகொல்ல, பிறைநிலா கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. விசிநவ பிரதேச மாணவர்களின் ஆங்கிலக் கல்வியில் மிகப்பெரிய மாற்றங்களையும், அபிவிருத்தியையும் பிறைநிலா கல்வி நிலையம் மேற்கொண்டு வருகின்றது.
சுமார் 150 மாணவர்கள் வரை கல்வி கற்கும் இந்த கல்வி நிலையத்தில் வருடாந்தப் பாடத்திட்டத்தில் உள்ளடங்கும் Spoken Day பயிற்சித்திட்டம் நேற்று புதன்கிழமை கல்வி நிலைய வளாகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் பிரதான பயிற்றுவிப்பாளராக இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும், உளப்பகுப்பாய்வாளருமான டொக்டர் எம்.பி. முர்ஷித் கலந்து கொண்டிருந்தார்.
அன்றாட வாழ்க்கையில் மாணவர்கள் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தை, சொற்றொடர் பிரயோகங்கள், ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கான சூழல் தெரிவு போன்ற பல்வேறு விடயங்கள் மாணவர்களுக்கு செயன்முறைப் பயிற்சியாக கற்றுக்கொடுக்கப் பட்டது.
பிறைநிலா கல்வி நிலையத்தின் பணிப்பாளர் சப்ராஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரம் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcjyboHKyDcQHV7PNW_CnoMWXjLBsGtsqNeexMFTLrFzPDNhM7u5TcL3hSM2MOlx7NKtQVQ_IxH5toFT8r6QGWRpa7i85nK2uJSherfMx0teFoJ-WwvWAKMIViOvsMFLHr4tu-gNrAItx12q5rZeHn-I2a4jNnQwhEAkaUcq59_SEgjGrZIQohqQeVwFc/s1600/5.jpeg)








No comments