-சப்ராஸ் அபூபக்கர்-
குருணாகல் மாவட்டம், கெடகஹட, பஹமுனையைச் சேர்ந்த மொஹமட் நஸார் பாத்திமா நஸ்லா இலங்கை சட்டக்கல்லூரியின் இறுதிப்பரீட்சையில் சித்தியடைந்து சட்டத்தரணியாக (Attorney-at-Law) தகுதி பெற்றுள்ளார்.
சியம்பளாகஸ்கொடுவ, மதீனா தேசிய பாடசாலையில் 2021ம் ஆண்டு உயர்தரப்பிரிவின் பழைய மாணவியான இவர் பேராதனைப் பல்கலைக்கழக இளங்கலைப்பட்டதாரியும், சட்டத்துறை இளங்கலைமானி பட்டத்தையும் பெற்றவராவார்.
தனது இலக்கில் உறுதியாய் நின்று, தனது 23 வது வயதில் சட்டத்துறையில் காலடி வைக்கும் இவரது சாதனை இன்னும் பல உயரங்களை நோக்கி அழைத்துச் செல்லட்டும்.
சட்டத்துறையில் நேர்மையுடனும்,அர்ப்பணிப்புடனும் சிறந்து விளங்கி சமூகநீதியை நிலைநாட்டும் உயர்ந்த பணியில் மேலும் பல வெற்றிகளைப்பெற பிறைநிலா ஊடகத்தின் மனமார்ந்த வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்...


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQzDgEQjDnbqMA3m-6dkCCqgijTf7sc2zjjaK2bPp79JN_GBlhvZIPIqZ1CB5XrksJSyVxnhfbMsI2MOxL0Upw4d4nVfLL8tbgOSaqSpYb5OFhw0Y4UJPFf1Od4wrBUpcBO20I9hLncRKm5wtDe2UhYcqiyAyCg6KnsorvnC_oBrkg3Nq4Hj2lYbTo8fk/s1600/1001475124.jpg)


No comments