பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு
7 பேர் காயம்!
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலையின் சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெடிப்பில் காயமடைந்த வைத்தியசாலை ஊழியர்கள் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவத்தினால் சிறுநீரக வைத்தியசாலை கட்டிடத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



No comments