Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest

மரண அறிவித்தல்

tamilsolution_ad_alt

இலங்கையின் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

 

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் 🚨

இலங்கை அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இன்று (25) நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பில் 158 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 63 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். வாக்களிப்பில் எவரும் நடுநிலை வகிக்கவில்லை. இதன்படி, ஆதரவு மற்றும் எதிர்ப்பு வாக்குகளுக்கு இடையில் 95 வாக்குகள் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு பொது வாக்கெடுப்பு தேவையில்லை என்றும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமானது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த வாக்கெடுப்பின் மூலம், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சட்டமாக்குவதற்கான முக்கிய பாராளுமன்ற நடைமுறை நிறைவு பெற்றுள்ளது.

 

 


No comments