🚨 எல்ல நீர்வீழ்ச்சியில் வெளிநாட்டு யுவதி உயிரிழப்பு! எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று (24) மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், இரண்டு வெளிநாட்டு யுவதிகள் நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றபோது, குறித்த யுவதி தவறி கீழே விழுந்ததாக எல்ல சுற்றுலாத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதேச மக்களின் உதவியுடன் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மீட்கப்பட்ட சடலம், 1990 அம்பியுலன்ஸ் சேவை மூலம் பதுளை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments