Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest

மரண அறிவித்தல்

tamilsolution_ad_alt

நவம்பர் 1 முதல் முக்கிய பரிவர்த்தனைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்

 நவம்பர் 1 முதல் வங்கிக் கணக்கு, வாகன, காணி, வணிகப் பதிவு போன்ற அனைத்திற்குப் TIN சான்றிதழ் கட்டாயம்🚨

நவம்பர் 1 முதல் வங்கிக் கணக்கு, வாகன, காணி, வணிகப் பதிவு போன்ற அனைத்திற்குப் TIN சான்றிதழ் கட்டாயம்🚨

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல், வங்கிக் கணக்கு திறத்தல், வாகனப் பதிவு, காணி பதிவு, வணிகப் பதிவு உள்ளிட்ட பல முக்கிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துநர் அடையாள எண் (TIN) சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டின் இல. 11 உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவும், உள்நாட்டு இறைவரி சட்டத்தின் 102(3) பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பரிவர்த்தனைகளுக்கும் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எந்தவொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்திலும் கணக்கு திறத்தல், கட்டிடத் திட்டத்திற்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்தல் அல்லது அதன் உரிமத்தைப் புதுப்பித்தல், காணி அல்லது காணி உரிமையைப் பதிவு செய்தல், வணிகத்தைப் பதிவு செய்தல் மற்றும் கடன் அட்டை பெற்றுக்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு TIN சான்றிதழ் தேவைப்படும்.

மேலும், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பங்குகளை மாற்றும் சந்தர்ப்பத்தில், பங்குகளை மாற்றுபவர் மற்றும் பங்குகளைப் பெறுபவர் ஆகிய இருவரும் செல்லுபடியாகும் TIN சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் அதிகாரிகளுக்கு, சம்பந்தப்பட்ட நபர் செல்லுபடியாகும் TIN சான்றிதழை சமர்ப்பித்த பின்னரே பரிவர்த்தனையைச் செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, மேற்கண்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள், இதுவரை TIN பெற்றிருக்காவிட்டால் முன்கூட்டியே TIN பெற்றுக்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

TIN-ஐ IRD-யின் e-Services தளத்தின் ஊடாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும். மேலும், அதே இணையவழி சேவையின் மூலம் TIN-ஐ சரிபார்க்கவும் முடியும்.

TIN சரிபார்ப்பின் அச்சுப் பிரதியில் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் மற்றும் TIN தெளிவாகக் காணப்பட்டால், சில சந்தர்ப்பங்களில் அந்த அச்சுப் பிரதியும் அதிகாரப்பூர்வ TIN சான்றிதழுக்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளப்படலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 2023 டிசம்பர் 31ஆம் திகதியன்று 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருந்த அனைத்து இலங்கை குடியிருப்பாளர்களும், அல்லது 2024 ஜனவரி 1ஆம் திகதி முதல் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும், 18 வயதை அடைந்தவுடன் TIN பெற்றுக்கொள்வது கட்டாயம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

 


No comments