Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest

மரண அறிவித்தல்

tamilsolution_ad_alt

மஹிந்தவை மாட்டிக் கொடுத்தாரா கோட்டாபய? மக்கள் மத்தியில் கேள்வியெழும் வாக்குமூலம்

மரண பீதியில் கோட்டாபய வழங்கிய சாட்சியால் பரிதாப நிலையில் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் தேசப்பற்றுள்ள பணியை ஆற்றியதாக இதுவரை நம்பியிருந்த மக்களின் கனவுகளையும் கோட்டாபய ராஜபக்ச தகர்த்தெறிந்துள்ளதாக சிங்கள மக்கள் மத்தியில் கொதிநிலை ஏற்பட்டுள்ளது.


லலித் மற்றும் குகன் ஆகிய இரண்டு சமூக செயற்பாட்டாளர்கள் காணாமல் போனமை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(29.09.2026) நடைபெற்றது.

இந்த வழக்கு விசாரணையில் சாட்சியமளிப்பதற்காகவே கோட்டாபய ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார்.

 

மரண பீதியில் கோட்டாபய

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இருந்து காணொளி மூலம் சாட்சியமளித்த அவர், மனுதாரரின் சட்டத்தரணியின் பல கேள்விகளுக்கு ஞாபகம் இல்லை என்றே பதிலளித்துள்ளார்.

கோட்டாபய விடுத்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு - ஐபிசி தமிழ்

 

சாட்சியாளராக சாட்சி வழங்கும் போதும் கோட்டாபய ராஜபக்ச மிகுந்த அச்சத்திற்கும் பீதிக்கும் உள்ளாகியிருந்தமை அவதானிக்கப்பட்டதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோட்டபாய சாட்சியமளிக்கும் போது, “நான் களத்தில் நடக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் சம்பந்தப்படுவதில்லை. பாதுகாப்புச் செயலாளராக எனது பொறுப்பு, அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாகும். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு செய்வதே என செயற்பாடாகும்.

களத்தில் நடக்கும் நடவடிக்கைகளில் சம்பந்தப்படுவதோ அல்லது ஆலோசனை வழங்குவதோ என்னால் செய்ய முடியாது. நான் செய்ததும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது தெளிவுபடுத்தல் மீது விமர்சகர்களின் விசேட கவனம் திரும்பியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச இருந்த காலத்தில் பாதுகாப்புப் பிரிவினரால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பான நேரடிப் பொறுப்பு, பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையே சாரும் என்பது கோட்டாபயவின் அந்த தகவல் மூலம் உறுதியாகியுள்ளது.

இதுவரை காலம் ராஜபக்ச குடும்பத்தினருக்காக பல்வேறு வகையான நூல்களை எழுதிய தரப்பினரும் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.(Lankasri)

 


No comments