Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest

மரண அறிவித்தல்

tamilsolution_ad_alt

சேருநுவரயில் இயற்கை அனர்த்த முன் ஆயத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு! திருகோணமலை – சேருநுவர சோமாதேவி வித்தியாலயத்தில் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன் ஆயத்தம் தொடர்பான செயன்முறை விழிப்புணர்வு நிகழ்வு இன்று புதன்கிழமை (30) நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் சேருநுவர பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இயற்கை அனர்த்தங்களால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சோமபுர, கல்லாறு, சிறிமங்களபுர, ஆதியம்மண்கேணி, மெதகம மற்றும் மஹாவலிகம உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை மையப்படுத்தி இவ்விழிப்புணர்வு செயன்முறை முன்னெடுக்கப்பட்டது. இதில் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர், சேருநுவர பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோருடன் கடற்படை, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் அவற்றை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை மேம்படுத்துவதும், அனர்த்த காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

 சேருநுவரயில் இயற்கை அனர்த்த முன் ஆயத்தம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!

May be an image of one or more people and text

திருகோணமலை – சேருநுவர சோமாதேவி வித்தியாலயத்தில் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன் ஆயத்தம் தொடர்பான செயன்முறை விழிப்புணர்வு நிகழ்வு இன்று புதன்கிழமை (30) நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் சேருநுவர பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

May be an image of one or more people and people studying

இயற்கை அனர்த்தங்களால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சோமபுர, கல்லாறு, சிறிமங்களபுர, ஆதியம்மண்கேணி, மெதகம மற்றும் மஹாவலிகம உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை மையப்படுத்தி இவ்விழிப்புணர்வு செயன்முறை முன்னெடுக்கப்பட்டது.

இதில் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர், சேருநுவர பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோருடன் கடற்படை, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

May be an image of one or more people

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் அவற்றை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை மேம்படுத்துவதும், அனர்த்த காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

 


No comments