Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest

மரண அறிவித்தல்

tamilsolution_ad_alt

வடகொரியாவின் அணுஆயுத பலம் அமெரிக்காவைப் போல் பெரியதல்ல - ட்ரம்ப்

வடகொரியாவின் அணுஆயுத பலம் அமெரிக்காவைப் போல் பெரியதல்ல - ட்ரம்ப்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னைத் தனது "நண்பர்" எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வடகொரியாவின் அணுஆயுத பலத்தை குறைத்து மதிப்பிட்டுப் பேசியுள்ளார்.

 

ஈரானால் அணுஆயுதங்களை வைத்திருக்க முடியாத போது வடகொரியாவால் எவ்வாறு வைத்திருக்க முடிகிறது என வொஷிங்டனில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கே ட்ரம்ப் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

முந்தைய அமெரிக்க நிர்வாகங்களின் தவறான அணுகுமுறையே வடகொரியா அணுஆயுதங்களைப் பெறுவதற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டிய ட்ரம்ப், கிம் ஜாங் உன் தன்னை மட்டுமே விரும்புவதாகவும், தான் பதவியில் இருக்கும் வரை அவருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும், வடகொரியாவிடம் கணிசமான அணுஆயுதக் கையிருப்பு உள்ளபோதிலும் அது அமெரிக்காவின் அளவுக்குப் பெரியதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.( Lankasri)

 


No comments