Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest

மரண அறிவித்தல்

tamilsolution_ad_alt

வடமேல் மாகாண ஊடகவியலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் செயலமர்வு

 



-சப்ராஸ் அபூபக்கர்-

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் பத்திரிகையாளர்களுக்கான அனர்த்தம், பேரிடர் தயார்நிலை, மீள்திறன் மற்றும் பொறுப்பு வாய்ந்த ஊடக அறிக்கையிடல் தொடர்பான பயிற்சிப்பட்டறை நாடுபூராகவும் நடைபெற்று வருகின்றது.



குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் வரிசையில் மூன்றாவது செயலமர்வு, வடமேல் மாகாணம், குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாட்களும் குருநாகல், பொத்துஹரயில் உள்ள சமூக அபிவிருத்தித் திணைக்களத்தின் தேசியப் பயிற்சி நிறுவனத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.



அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் தயார்படுத்தல், மண்சரிவு அபாயங்களும் முன்னெடுக்க வேண்டிய நடைமுறைகளும், காலநிலை மாற்றங்களும் மேற்கொள்ள வேண்டிய அவதானங்களும், ஊடக அறிக்கையிடுதல் தொடர்பில் ஊடகவியலாளர்களின் அவதானம், ஊடக அறிக்கையிடல் தொடர்பான ஊடகச் சட்டங்கள் என பரந்த பல பரப்புக்கள் முழுமையான செயன்முறையாக பயிற்றுவிக்கப் பட்டிருந்தன.



இச்செயலமர்வில் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள ஊடக நிறுவனங்களின் வடமேல் மாகாணத்துக்கான ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.


இதேவேளை இந்த செயலமர்வில் பிறைநிலா ஊடக வலையமைப்பு சார்பாக அதன் பணிப்பாளர் சப்ராஸ் அபூபக்கர் மற்றும் பிறைநிலா ஊடக வலையமைப்பின் செயலாளர் M.P.M. ரிப்கான் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.



 செயலமர்வில் கலந்து கொண்ட சகல ஊடகவியலாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, அனர்த்த காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு செய்தி அறிக்கையிடலின் முக்கியத்துவம் பற்றி ஊடகவியலாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












No comments