Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest

மரண அறிவித்தல்

tamilsolution_ad_alt

ஈஸ்டர் தின தாக்குதல்! கோட்டாபயவிற்கு நெருக்கமானவரது மகள் உடனடி விடுதலை - வெளிவரும் சர்ச்சைக்குரிய தகவல்கள்

ஈஸ்டர் தின தாக்குதல்! கோட்டாபயவிற்கு நெருக்கமானவரது மகள் உடனடி விடுதலை - வெளிவரும் சர்ச்சைக்குரிய தகவல்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவரின் மகளொருவர், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விவகாரம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வெளிப்படுத்தப்பட வேண்டிய உண்மை

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு தரப்பினருக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின்போது, ஷங்ரிலா விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் குண்டுதாரியுடைய மாமனார் அலாவுதீன் தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு சந்தேகத்தின் பேரில் அலாவுதினீன் மகளொருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானவுடன் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அலாவுதீன், கோட்டாபய ராஜபக்சவுக்கு மிக நெருக்கமானவராகவும், அவருக்காக நேரடியாக நிதி செலவிட்டவராகவும் அறியப்படுகின்றார்.

ஈஸ்டர் தின தாக்குதல்! கோட்டாபயவிற்கு நெருக்கமானவரது மகள் உடனடி விடுதலை - வெளிவரும் சர்ச்சைக்குரிய தகவல்கள் | Person Linked To Easter Sunday Attacks Releasedஅதேசமயம், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, இந்த விடயங்கள் அனைத்தும் முழுமையாக விசாரணை செய்யப்பட்டு மக்களுக்கு உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இதேவேளை, ராஜபக்சர்களுடன் இருப்பது பாதாள உலகக் குழுவுடன் இருப்பதற்கு சமமான ஒன்றாகும்.

அந்தக் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தவர்கள் பலரும் தங்களது சொந்த அரசியலை இழந்து அவர்களின் அடிவருடிகளாக மாறியுள்ளனர்.

ராஜபக்ச குடும்பத்துடன் இருந்தவர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனக் கூற முடியாது. ஆனால் ஒருவர் குற்றம் செய்திருந்தால் அவர் எந்த அரசியல் குடும்பத்துடன் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.(lankasri)

 



No comments