Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest

மரண அறிவித்தல்

tamilsolution_ad_alt

வாகனப் பதிவு இலக்கத் தகடுகள், சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதில் உள்ள தாமதம் தொடர்பில் விசாரணை நடத்துக!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குக் காரணமான விடயங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தியது.

குறித்த தாமதம் எவ்வாறு ஆரம்பமானது, அதற்குப் பாதிப்பை ஏற்படுத்திய நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் காரணிகள், அத்துடன் தொடர்புடைய கேள்விப்பத்திர மற்றும் கொள்முதல் செயன்முறை தொடர்பான முழுமையான அறிக்கையை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்காரின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

வாகன இலக்கத் தகடுகள் விநியோகம் குறித்து வெளியாகியுள்ள தகவல் - தமிழ்வின்

வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் காரணங்களை கேட்டறிந்த குழு, அதற்கான காரணங்கள், தாமதம் ஆரம்பமான சந்தர்ப்பம், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தொடர்புடைய கேள்விப்பத்திர மற்றும் கொள்முதல் செயன்முறை குறித்து விரிவான அறிக்கையொன்றைத் தயாரித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. 2026 மார்ச் 10ஆம் திகதிக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு 14 நாட்களுக்குள் இலக்கத் தகடுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. தற்போது அச்சிடுவதற்காக நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை சுமார் 678,000 ஆக உள்ளதுடன், நாளொன்றுக்கு சுமார் 4,600 அனுமதிப்பத்திரங்களை மட்டுமே அச்சிடக்கூடிய நிலையில் இருப்பதால், நிலுவை மேலும் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களுக்காக வருகிறது புதிய நடைமுறை!! –  வவுனியா நெற்

தற்கு விரைவான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், ஒக்டோபர் 15ஆம் திகதிக்குள் இரண்டு புதிய அச்சு இயந்திரங்களை நிறுவி, நாளாந்த அச்சிடும் திறனை 8,200 சாரதி அனுமதிப்பத்திரங்கள் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்களுக்குத் திறமையான சேவையை வழங்குவதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான தாமதங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.

திணைக்களத்தின் நிர்வாகத் திறன், அதில் காணப்படும் வெற்றிடங்கள், கொள்முதல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் பொதுச் சேவைகளை வழங்கும்போது ஏற்படும் தேவையற்ற தாமதங்களைத் தடுப்பது தொடர்பிலும் குழு விசாரித்தது. (AdaDerana)


No comments