உலக எரிபொருள் சந்தைக்கு மேலும் நெருக்கடி? ஏற்றுமதியை நிறுத்திய சீனா
ஹாங்காங் மற்றும் மக்காவோ ஆகிய பிராந்தியங்களைத் தவிர ஏனைய நாடுகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தயாரிப்புகளின் ஏற்றுமதியை சீனா மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் காரணமாக மத்திய கிழக்கிலிருந்து மசகு எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட சீர்குலைவைத் தொடர்ந்து, உள்நாட்டு எரிபொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன் பகுதியாக, சீன அரசிற்குச் சொந்தமான முன்னணி எண்ணெய் நிறுவனமான பெட்ரோசீனா, அக்டோபர் மாதத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த பெற்றோல் மற்றும் விமான எரிபொருள் விநியோகத் தொகுதிகளை இரத்து செய்துள்ளது.
உள்நாட்டு எரிபொருள் கையிருப்பு
அதேபோன்று, தனியார் சுத்திகரிப்பு நிறுவனமான செஜியாங் பெட்ரோ கெமிக்கல் நிறுவனமும் இந்த வார விடுமுறைக் காலத்தில் எந்தவொரு எரிபொருள் ஏற்றுமதியையும் திட்டமிடவில்லை என்றும் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சீனாவின் இந்த இடைநிறுத்தம் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையை மேலும் உயர்த்தக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 7 ஆம் திகதி முடிவடையும் சீன தேசிய தின விடுமுறை நாட்களுக்குப் பின்னரே ஏற்றுமதித் தடை தளர்த்தப்படுவது குறித்து சீனா தீர்மானிக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், உள்நாட்டு எரிபொருள் கையிருப்பு மற்றும் உற்பத்தி அளவை அடிப்படையாகக் கொண்டே இது தொடர்பான இறுதி முடிவை பெய்ஜிங் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது. (lankasri)



No comments