Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

விராத் கோலி ஒரு சுயநலவாதி - வெங்கடேஷ் பிரபுவின் கருத்தால் அதிரும் கிரிக்கட் ரசிகர்கள்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 49 சதம் அடித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சாதனையை சமன் செய்து இருக்கிறார். இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி சுயநலமாக விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.


அணியின் ஸ்கோரை விராட் கோலி பார்க்காமல் சதம் அடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடுகிறார் என்று ரசிகர்கள் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு விராட் கோலி ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.


மேலும் தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு விராட் கோலி, சூழலை பொறுத்துதான் நாங்கள் அப்படி விளையாடுகிறோம். அணி நிர்வாகம் தான் என்னை அப்படி விளையாட சொல்கிறது என்றெல்லாம் கூறி வருகிறார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், விராட் கோலி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார்.


இது குறித்து பேசிய அவர் விராட் கோலி சுயநலமாக விளையாடுகிறார். தனிப்பட்ட சாதனைகளை அவர் மிகவும் விரும்பி விளையாடுகிறார் போன்ற முட்டாள்தனமான விவாதங்களை நான் கேட்டு வருகிறேன். ஆம் விராட் கோலி ஒரு சுயநலவாதி தான். 100 கோடி மக்களின் கனவை முன்னிறுத்தி அதனை துரத்துவதில் விராட் கோலி ஒரு சுயநலவாதி தான். இவ்வளவு சாதனைகளை படைத்த பிறகும் எப்போதுமே சிறப்பாக விளையாட வேண்டும் என்று போராடுவதில் அவர் ஒரு சுயநலவாதி தான்.


மற்ற வீரர்களுக்கு புதிய இலக்கை நிர்ணயிப்பதில் விராட் கோலி நிச்சயம் சுயநலவாதி தான். அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று போராடுவதில் விராட் கோலி ஒரு சுயநலவாதி தான் என்று வெங்கடேஷ் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். கடினமான ஆடுகளத்தில் மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தி இருப்பதாக பாராட்டி உள்ள வெங்கடேஷ் பிரசாத் இந்திய அணியின் பவுலர்களையும் புகழ்ந்து பேசி இருக்கிறார்.




No comments