Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

LAUGFS எரிவாயு சிலிண்டர்கள் விலைகளில் மாற்றமில்லை

இம்மாதம் லாஃப்ஸ் (Laugfs Gas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிக்காமல் அதே விலையில் பேண தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி கலாநிதி நிரோஷன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.


லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்தன


12.5kg: ரூ. 3,835 இலிருந்து ரூ. 3,985 ஆக ரூ. 150 இனால் அதிகரிப்பு

5kg: ரூ. 1,535 இலிருந்து ரூ. 1,595 ஆக ரூ. 60 இனால் அதிகரிப்பு

விலைச்சூத்திரத்திற்கு அமைய நேற்று (05) முதல் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அந்நிறுவனம் அதிகரித்துள்ளது.


அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்: (கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்)



12.5kg: ரூ. 3470 இலிருந்து ரூ. 3,565 ஆக ரூ. 95 இனால் அதிகரிப்பு

5kg: ரூ. ரூ. 1393 இலிருந்து ரூ. 1,431 ஆக ரூ. 38 இனால் அதிகரிப்பு

2.3kg: ரூ. 650 இலிருந்து ரூ. 668 ஆக ரூ. 18 இனால் அதிகரிப்பு (TKN)


No comments