அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை சனிக்கிழமை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு நாளை சனிக்கிழமை (09) மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (10) காலை 9 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. (AD)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgriH0bJ4bOXJAqj_iE8QDCJ3m9C1hLv5sTYaY8aN7xV-7rEHo5YUH3fEIyytZssefekRIhp_6fYxG9OOsy0Gw7wyawPj9cdrxNoms3KCsHm335gCKb2DG79rVdhYhmi926UCN5Yv4l-sZ_EY15bl9dGYixwQO89m3U0hbvMn4z305zdDPSB5K3xUu_8BXO/s16000/water_1200px_22_11_02-1000x600.jpg)



No comments