Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

ஆசிரியர் பற்றாக்குறைக்கு சாதகமான பதில் - டிஜிட்டல் மயமாகும் கல்வித்துறை

 


கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான கொள்கைத் திட்ட வரைபை 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாக கல்வி மறுசீரமைப்புக்கான டிஜிட்டல் செயலணியின் பணித்திட்டத்தை முன்வைத்த அதிகாரிகள் தெரிவித்தனர். 


கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கல்வி மறுசீரமைப்புக் குறித்த உபகுழு, பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரினி அமரசூரிய தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. 



இங்கு கல்வி மறுசீரமைப்புக்கான டிஜிட்டல் செயலணியினால் தயாரிக்கப்பட்ட பணித் திட்டத்தை முன்வைத்த அதிகாரிகள், ஆறு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் கல்வி மறுசீரமைப்பில் இந்த டிஜிட்டல் மயப்படுத்தலை முன்னெடுப்பது குறித்துக் கவனம் செலுத்தியிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 


இதற்கு அமைய, டிஜிட்டல் மயமாக்கல் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைக்கு சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 


மேலும், கல்விக்கான தகவல் தொடர்பாடல் குறித்த உபகரணங்கள் மற்றும் வளங்களை வழங்குதல், சில பேரிடர் சூழ்நிலைகளில் பாடாசலைகளைத் தொடர்ந்தும் இயங்கச் செய்தல், மாணவர்களுக்கான சிறுவர் பராயத்தை டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் பெற்றுக்கொடுத்தல் போன்ற துறைகளின் கீழ் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும், இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை முன்னெக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 



2025 டிசம்பர் 31ஆம் திகதியாகும்போது இணையத்தள வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு இணையத்தள வசதிகள், டிஜிட்டல் ஸ்மார்ட் போர்ட் மற்றும் கணினி அல்லது மடிக்கணினி அல்லாத பாடசாலைகளுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் குறித்த செயலணியின் அதிகாரிகள் தெரிவித்தனர். 


தற்பொழுது காணப்படும் தகவல்களுக்கு அமைய நாட்டில் உள்ள 3 இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு மின்சார வசதிகள் இல்லையென்றும், 546 பாடசாலைகளில் ஒரு கணினியோ அல்லது மடிக்கணினியோ அல்லது டப் கருவியோ இல்லையென்றும், 2088 பாடசாலைகளில் டிஜிட்டல் ஸ்மார்ட் போர்ட்கள் இல்லையென்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 


இங்கு உரையாற்றிய பிரதமர், எதிர்காலத்திற்காக அதிக அளவு பணத்தை முதலீடு செய்து மேற்கொள்ளப்படும் கல்வித் துறையில் இந்த தனித்துவமான மாற்றத்திற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என்று கூறினார். 


அதன்படி, கல்வி மறுசீரமைப்பு தொடர்பாகப் பொருத்தமான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு டிஜிட்டல் செயலணியை அவர் கேட்டுக்கொண்டார். (AdaDerana)


No comments