-சப்ரா ஷாமில்-
குருநாகல் பானகமுவ அந்நூர் தேசிய பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் நேற்று புதன் கிழமை இடம்பெற்றது.
கல்லூரியின் முதல்வர் ஜனாப் இர்ஷாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களும், ஆசிரியர் குழாமும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அக்டோபர் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினமாகும். எனவே சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்க நாடுதழுவிய ரீதியில் அதிகமான பாடசாலைகளில் சிறுவர் தின நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதனடிப்படையில் பானகமுவ அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்து நெறிப்படுத்தியிருந்தனர்.
சிறுவர் விளையாட்டுக்கள், மேடை நிகழ்ச்சிகள் என்பவற்றோடு பாடசாலை மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி கெளரவிக்கின்ற நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
மாணவிகளுக்கான சங்கீதக்கதிரை, தொப்பி மாற்றுதல், போத்தலுக்கு நீர் நிரைத்தல் போன்ற வினோத விளையாட்டுக்களோடு மாணவர்களுக்கான indoor கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வுகள் யாவும் பூரண திருப்தியோடு இடம்பெற்றிருந்ததோடு பாடசாலை நிர்வாகம், மற்றும் ஆசிரியர் குலாம் முழுமையான ஒத்துழைப்பை நிகழ்வுக்காக வழங்கியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments