Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

குருநாகலில் இடம்பெற்றது புகைப்படத்துறைசார் பயிற்சிப் பட்டறை

 


பிறைநிலா ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த புகைப்படத்துறைசார் பயிற்சிப் பட்டறை கடந்த சனி, மற்றும் ஞாயிறு தினங்களில் இடம்பெற்றது. 


குருநாகல் நகரில் இடம்பெற்ற இந்த Photography பயிற்சிப் பட்டறையில் புகைப்படத்துறை ஆர்வலர்கள் சிலர் கலந்து பயன்பெற்றனர்.



பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் சப்ராஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் சிரேஷ்ட புகைப்படக் கலைஞரும், புகைப்படத்துறைசார் பயிற்றுவிப்பாளருமான சீனு ராம்தாஸ் பயிற்றுவிப்பாளராக கலந்து கொண்டிருந்தார்.


புகைப்படத்துறையின் முக்கிய அம்சங்களான Shutter, Aperture, ISO உள்ளடங்களாக 

Camera Types

Camera Daigram

Exposed Meter

Depth of field

Focul Length 

Exposure Mode

Focusing


என பல விடயங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன.



இரண்டாம் நாள் பயிற்சியின் போது Studio தொடர்பான பொறிமுறைகள், நுட்பங்கள் போன்றன முறையான பயிற்சிகளோடு வழங்கப்பட்டிருந்தன.



பிறைநிலா ஊடக வலையமைப்பு ஊடகத்துறை சார்ந்த கற்கைநெறிகளை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்ற நிலையில் புகைப்படத்துறைசார் கற்கைநெறியின் குழு 09 ற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 



எனவே இந்த புகைப்படத்துறைசார் பயிற்சிப்பட்டறையின் குழு 09 ல் நீங்களும் இணைந்து கொள்ள விரும்பின் 077 3147675 எனும் இலக்கத்திற்கு உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.











No comments