-S.M. அஸ்ஹர்-
குருநாகல் மாவட்டம், அனுக்கன, குளி/மடிகே அனுக்கன மு.ம.வித்தியாலயத்தின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா நேற்று புதன்கிழமை (2025.10.22) நடைபெற்றது.
பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, அதிபர் ஜனாப் பௌசான் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
நிகழ்வின் பிரதம அதிதயாக கிரியுல்ல வலயக் கல்விப்பணிமனையின் தமிழ் பிரிவுப் பணிப்பாளர் ஜனாப் S.L.M. பாயிஸ் உம், அதிதிகளாக அயற்பாடசாலை அதிபர்களும், பாடசாலையின் முன்னையநாள் அதிபர் ஜனாப் அன்வர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மாணவர்களது மேடை நிகழ்ச்சிகளும் இங்கே மேடையேற்றப்பட்டிருந்தன. நிகழ்வின் இறுதியில் மாணவத் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவர்களுக்கான சின்னமும் அணிவித்து கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments