Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

வாசிப்பு மாதத்தை கொண்டாடிய அரக்கியால மு.ம.வி. ஆரம்பப்பிரிவு மாணவர்கள்

 



-சப்ராஸ் அபூபக்கர்-


வாசிப்பு உலகம் ஒக்டோபர் மாதத்தை வாசிப்பு மாதமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. அதனடிப்படையில் நாடுபூராகவும் உள்ள பாடசாலைகளில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


குருநாகல் மாவட்டம்,  கிரி/அரக்கியால மு.ம.வித்தியாலய தரம் 03, 04, 05 மாணவர்களும் இன்று செவ்வாய்கிழமை வாசிப்பு மாதத்தை சிறப்பிக்க நடை பவணி ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அரக்கியால பாடசாலையில் ஆரம்பித்து கெகுணகொல்ல சந்தி வரை இந்த நடை பவணி தொடர்ந்திருந்தது.



வாசிப்பை ஊக்கப்படுத்தும் பதாதைகள் கையிலேந்தி இந்த மாணவர்கள் நடைபவணியை மேற்கொண்டிருந்தனர். இவர்களோடு வகுப்பாசிரியர்களும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர்.


இதேவைளை ஊர்வலத்தின் போது மாணவர்களுக்கான சிற்றுண்டிகளை MFM GROCERY,  ASDA SHOP, VISINAWA STORES வழங்கி மாணவர்ளை உற்சாகப்படுத்தியிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.





No comments