Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

போலியோவுக்கு வக்சீன் (Vaccine) மட்டுமே அதிசிறந்த தடுப்பு முறை.


போலியோ (இளம்பிள்ளைவாதம்) குறித்த விழிப்புணர்வு அறிக்கையொன்றினை அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் (Unemployed Union) குழந்தை நோயியல்ப்பிரிவினர் வெளியிட்டுள்ளனர். இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 


அக்டோபர் 24 ஆம் திகதி உலகம் முழுவதும் போலியோ தினம் (World Polio Day) எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் போலியோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதிக்கப்பெற்ற குழந்தைகளை மீள்நிலைக்குக் கொண்டுவருவதாகும்.


போலியோ என்பது நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கும் வைரஸ் நோயாகும். இது குறிப்பாக குழந்தைகளில் ஏற்பட்டு, தசை பலவீனம் மற்றும் பக்கவாதம் போன்ற நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. உலக போலியோ தினத்தை முன்னிட்டு, இந்த நோயின் பின்விளைவுகளுக்கு சித்த மருத்துவத்தில் கையாளப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் நாட்டில் கிடைக்கும் சித்த மருத்துவ சேவைகள் குறித்து தெரிவிக்க வேண்டிய கடமைப்பாடு எமக்குள்ளது



தடுப்பூசி (Polio Vaccine) மட்டுமே இந்த நோயிலிருந்து முழுமையான பாதுகாப்பை அளிக்கும் ஒரே வழி. தடுப்பூசி மூலம் இந்த நோயை முற்றிலுமாக தவிர்க்க முடியும்.


நரம்பு செயல்பாட்டை மேம்படுத்தவும், நோயாளிகள் மீண்டுவரவும் சித்தமருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது


போலியோ வாத நோய் வகையைச் சேர்ந்தது. வாதம் பாதிக்கப்படுவதால் நரம்பு, தசை, மூட்டு மற்றும் அதன்  இயக்கங்கள் பாதிக்கப்படுகிறதன


உள் மருந்துகளான வாத குளிகை, மஹாவல்லாதி குளிகை, அசுவகந்தா லேகியம், அமுக்கரா சூரணம், மற்றும் பல மருந்துகள் உடல் வலிமை மற்றும் நரம்பு சக்தியை மேம்படுத்தும். மருந்தின் வகை, அளவை மருத்துவரே தீர்மானிக்க வேண்டும்



வெளிப்புற சிகிச்சைகளாக அப்பியங்கம், பிச்சு, லேபனம், சுவேதனம் மற்றும் பஞ்சகர்ம சிகிச்சைகளான நசியம் (Nasyam), வஸ்தி போன்ற சிகிச்சைகள் -  நரம்பு செயல்பாட்டை தூண்டுவதற்காக மேற்கொள்ளப்படுகின்றன. சித்த மருத்துவத்தில் போலியோவிற்கு 21 நாள் சிகிச்சை திட்டம் மூலமாக சிகிச்சை வழங்கப்படுகிறது


பெற்றோர்கள் வாதத்தை அதிகரிக்கும் உணவுகள், குளிர்ச்சியான  உணவுகளை தவிர்த்து வழங்க வேண்டும். யோகாசனங்கள் மற்றும் சீரான உடற்பயிற்சிகளும் மீள்நலத்திற்கு உதவுகின்றது. இவ்வாறான சிகிச்சை முறைகள் மூலம் நரம்பு மற்றும் தசை சக்தி அதிகரிப்பது, உடல் வெப்ப நிலை சீராவது, பக்கவாதம் மற்றும் பலவீனம் குறைவது, மேலும் நிம்மதியான உறக்கம் கிடைப்பது போன்ற பலன்கள் கிடைக்கும்.


இலங்கையில் பொதுமக்களுக்குத் தரமான சித்தமருத்துவ சேவைகளை வழங்கும் பல முக்கியமான மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இவை தேசிய, மாகாண, மாவட்ட, ஆதார, தள மற்றும் கிராமிய மட்டங்களில் இயங்கி வருகின்றன. நாட்டில் தற்போது கீழுள்ள வைத்தியசாலைகள் சித்த, ஆயுர்வேத மற்றும் யூனானி மருத்துவப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன. பொரளை தேசிய ஆயுர்வேத வைத்தியசாலை, கம்பஹா விக்கிரமராச்சி ஆயுர்வேத போதனா வைத்தியசாலை, கைதடி சித்த போதனா வைத்தியசாலை, கோணேசபுரி சித்த போதனா வைத்தியசாலை, மஞ்சந்தொடுவாய் மற்றும் நிந்தவூர் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை, பல்லேகலை, தியத்தலாவ, அனுராதபுரம் மாகாண ஆயுர்வேத வைத்தியசாலை, இரத்தினபுரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாகாண ஆயுர்வேத வைத்தியசாலை, டீ.பீ. வெலகெதர மாகாண ஆயுர்வேத வைத்தியசாலை, கல்முனை, மொல்லிகொட, மின்னேரியவில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலை. ஓந்தாச்சிமடம், கப்பல்துறை, மாதம்பே, ஏறாவூர், மட்டக்களப்பின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு ஆகிய ஆதார வைத்தியசாலைகள், தள வைத்தியசாலைகளான மன்னார், வவுனியா, அச்சுவேலி,  கிளிநொச்சி, கொத்மலை, கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகளான நேபட, வீதியகொட, கோபாலபுரம், பண்டத்தரிப்பு, கொடிகாமம், பன்விலை, நில்தண்டாஹின்ன, தொலுவ, நாரம்மல, நெதலகமுவ, வாரியபொல, அம்பன்பொல, முருதென்கே, நோர்த் மாத்தளை, தென்ன, கெலிஓய, தொலுவ ஆகிய இடங்களிலும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பிரதேச சபைகளின் கீழும் இயங்கும் இலவச சுதேச மருத்துவமனைகள் வழியாகவும்  பொதுமக்கள் தரமான சிகிச்சைகளை இலவசமாகப் பெறமுடியும்



எனினும், இச்சேவைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பலர் இதன் முழுப் பயனையும் பெற முடியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


சித்த, ஆயுர்வேத மற்றும் யூனானி மருத்துவ முறைகள் பல நாட்பட்ட நோய்களுக்கும், நரம்பு மண்டல பாதிப்புகளுக்கும் பயனுள்ள மாற்று சிகிச்சை முறைகளை வழங்குகின்றன. 


போலியோ பின்விளைவுகளுக்கான மீள்நலம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளுக்கு சித்த மருத்துவ முறைகள் உதவியாக இருக்குமென்பதில் எதுவித ஐயமும் இல்லையென அரசவேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் குழந்தை நோய்ப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். 


No comments