Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

விசிநவயில் கல்விப்புரட்சி செய்யும் பிறைநிலா கல்வி நிலையம் - மீண்டும் ஆங்கிலக் கல்வியில் புதிய தடம்



விசிநவ, கெகுணகொல்ல பிறைநிலா கல்வி நிலையத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான English Camp இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.


பிறைநிலா கல்வி நிலையத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் சப்ராஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஆங்கிலப்பாட ஆசிரியரும், கண்டி Trinty கல்லூரியின் பழைய மாணவருமான w .M  அப்துர் ரஹ்மான் வளவாளராக கலந்து சிறப்பித்திருந்தார்.



பிறைநிலா கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளை அடையும் இந்நிலையில் விசிநவ பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் மிகப் பெரிய உந்து சக்தியை பிறைநிலா கல்வி நிலையம் வழங்கி கொண்டிருக்கின்றது. 


பிறைநிலா, விசிநவ பிரதேசத்தில் இருக்கும் முதற்தர தனியார் கல்வி நிறுவனமாகும், இதில் இந்தப் பிரதேசத்தில் உள்ள தரம் 1 தொடக்கம் 05 வரையான  மாணவர்கள் வார இறுதி நாட்களில் ஆங்கிலக் கல்வியை கற்றுக் கொண்டிருக்கின்றனர். 



ஆங்கிலம் என்பது சர்வதேச மொழி. எனவே அதனை மிகச்சிறப்பாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக மிகச் சிறப்பான திட்டமிடல்களோடு கல்வித் திட்டம் இங்கே முன்னெடுக்கப்படுகின்றது.



அதனடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான English Camp சியம்பலாகஸ்கொடுவ ஜனா உள்ளக அரங்கில்  இன்று நடைபெற்றிருந்தது. ஆங்கிலத்தோடு தொடர்புடைய பல செயன்முறைப் பயிற்சிகள் இங்கே மாணவர்களுக்கு வழங்கப் பட்டிருந்தன. மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடனும், சுறுசுறுப்பாகவும் இந்த முகாமில் கலந்து கொண்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.




தொடர்ச்சியாக பிறைநிலா கல்வி நிலையத்தில் மாணவர்களின் ஆங்கிலக் கல்விக்கு உரமூட்டும் பல கல்வி நடவடிக்கைகள் செயன்முறையாக வழங்கப் படுகின்றமை இந்தக் கல்வி நிலையத்தின் சிறப்பம்சமாகும்.


இதேவேளை 2026 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் இப்பொழுது கூறப்படுகின்றன. 2026 இல் தரம் 1 க்கு சித்தியடையும் மாணவர்களும், தரம் 2, தரம் 3, தரம் 4 மாணவர்களும் எமது கல்வி நிலையத்தில் இணைந்து கொள்ளலாம்.


தேவையான விண்ணப்பப்படிவங்களை சனி, ஞாயிரு தினங்களில் எமது பிறைநிலா கல்வி நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்பதை நினைவு படுத்துகிறோம்.


மேலாதிக்கத் தகவல்களுக்கும், தொடர்புகளுக்கு.


சப்ராஸ் அபூபக்கர் - பணிப்பாளர் (077 3147675)











No comments