Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

பிரதான வீதிகளின் அபிவிருத்திக்கு 115 பில்லியன் செலவு - 3 ஆண்டுகளில் 1000 பில்லியன்




எதிர்வரும் 3 ஆண்டுகளில் இலங்கை சுமார் 1000 பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளதாக திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ.கே. செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

 

டிட்வா புயலினால் ஏற்பட்ட சேதங்களுக்காகவும், மீட்புக்காகவும் நிவாரண பணிகளுக்காகவுமே இந்த நிதி செலவிடப்படவுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் 2025 இல், நிவாரணத்திற்காக சுமார் 75 பில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது. 


அத்துடன், பிரதான வீதிகளின் அபிவிருத்திக்காக 115 பில்லியன் ரூபாய் நிதி செலவாகும். 

 


அதேநேரம், பாலங்களை மீண்டும் அபிவிருத்தி செய்வது போன்ற சில நடவடிக்கைகளுக்கு 18 மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம் என்றும் திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ.கே. செனவிரத்ன தெரிவித்துள்ளார். (Hiru News)




No comments